fbpx
Homeபிற செய்திகள்அடுத்த விண்வெளி மையம் நிலவில் தான் இருக்கும்:- மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

அடுத்த விண்வெளி மையம் நிலவில் தான் இருக்கும்:- மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் புதிய கண்டு பிடிப்புகளின் அவசியம் குறித்து மாணவர்களிடையே கண்டுபிடிப்பு போட்டியை பிக்பாங்க் 2024 என்ற பெயரில் பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நடத்தியது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாண வியர்களுக்கு பரிசுகளை வழங்கி சந்திரயான் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், “மாணவர்கள் இன்வால்வ் மெண்ட், இன்னொவேசன், டீம் வொர்க் இருந்தால் நம் திட்டங்களில் வெற்றிபெற முடியும். அப்போது தான் அனைவரும் ஐஐடி செல்ல முடியும்.

அடுத்த விண்வெளி மையம் நிலவில் தான் இருக்க வேண்டும் என சொல்லியது இந்தியா அதனை அனைத்து நாடுகளும் ஏற்று கொண்டுள்ளன’’ என்றார்.

இவ்விழாவில், கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி கிளப் “பிக்பாங்க் 2024” திட்டத்தின் தலைவரான ரோட்டேரியன் துரை நாராயணசாமி, ரோட்டேரியன் லட்சுமணன் ஆகியோரும் இணை தலைவரான ஆர்.நவநீத கிருஷ்ணன், செயலாளர் சி.வி.தேவதாஸ் ஆகியோர் அறிவியல் கண்காட்சி பற்றி பேசினர்.

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img