fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரி மாணவர்களுக்கு தைவான் நாட்டில் இன்டர்ன்ஷி பயிற்சி

கேபிஆர் கல்லூரி மாணவர்களுக்கு தைவான் நாட்டில் இன்டர்ன்ஷி பயிற்சி

கோவை, கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பல்வேறு பன்னாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங் களை மேற்கொண்டுள்ளது. அதன்படி இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறு வனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுகின்றனர்.

அதன்படி இந்த கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயிலும் மாண விகள் அஸ்மிதா, கோபிகா, கீர்த்திகா மற்றும் மாண வர் பிரணவ் தர்ஷன் ஆகியோர் தைவான் நாட் டின் முன்னணி கல்வி நிறுவனங்களாக விளங்கும் தேசிய மத்திய பல்கலைக் கழகம் தைவான், தேசிய சன் யாட் சென் பல் கலைக்கழகம் தைவான் மற்றும் தேசிய சாங்குவா கல்வி பல்கலைக்கழகம் தைவான், ஆகிய கல்வி நிறுவனங்களில் உதவி தொகையுடன் கூடிய இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக செல்கின் றனர்.

அவர்களை கல்லூரி யின் தலைவர் கேபி ராமசாமி, கல்லூரியின் முதல்வர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பன்னாட்டு தொடர்பு மையம் ஏற்பாடு செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img