கல்ருயிட் குழுமம், 10.8 பில்லியன் யுரோ டாலர் மதிப்புமிக்க நிறுவனம், 33,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை நான்கு நாடுகளில் கொண்டுள்ளது.
இந்தியாவில் முதலாவது மையம், ஐதராபாத்தில் செயல்படுகிறது.
இது தனது இரண்டாவது சர்வதேச மையத்தை கோவையில் (கே.டி.சி. டெக் பார்க், துடியலூர் – சர வணம்பட்டி மெயின் ரோடு, சரவணம்பட்டி) துவங்கி உள்ளது.
இதற்கான துவக்க விழாவில் இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தூதுவர் டிடியர் வாண்டர் ஹெசல்ட், தலைமை விருந்தினராக பங்கேற்றார். இதில் அவர் பேசுகையில், கல்ருயிட் நிறு வனம் கோவையில் தனது மையத்தைத் தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வரும் ஆண்டில் இந்தியாவில் பெரிய பொருளாதார முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார்.
கவுரவ விருந்தினராக கோவை கே.ஜி., மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி பக்த வத்சலம், கோவை மாநகர காவல் துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கல்ருயிட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் வான் பெலிங்கன் மற்றும் இந்தியாவின் கல்ருயிட் குழுமத்தின் தலைவர் ஹரி சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.