fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஆசிய முதலீட்டு வங்கி குழு ஆய்வு

கோவையில் ஆசிய முதலீட்டு வங்கி குழு ஆய்வு

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை யைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத் தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடியிலும், கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட் டத்துக்கு ரூ.10,740 கோடி யிலும் விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங் களிப்பு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் வரை 20.4 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைகிறது.

ஒன்றிய அரசின் அனு மதி கிடைத்த உடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மற்றும் கோவை திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி விருப்பம் தெரி வித்ததுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னத்தின் குழுவுடன் இணைந்து மதுரையில் நேற்று, முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அந்த குழு இன்று கோவையில் ஆய்பு மேற் கொண்டது. திட்ட இயக்குனர் அர்ஜுனன் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியு சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொது மேலாளர் ரேகா ஆகியோர் உக்கடம் பேருந்து நிலையம் முன்பாக ஆய்வு நடத்தினர்.

உக்கடத்தில் ஆரம்பிக் கும் ஒரு முனையம் ராம் நகர், காந்திபுரம், கண பதி, அத்திப்பாளையம் ஜங்ஷன், விநாயகபுரம், சித்ரா, சரவணம்பட்டி, விசுவாசபுரம், விஜிபி நகர், சத்தியமங்கலம் சாலையில் 14.4 கி.மீ. செல்கிறது. அதேபோல கோவை உக்கடம் பேருந்து நிலை யத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குப்புசாமி மருத்துவமனை, லட்சுமி மில், நவ இந்தியா, பீளமேடு, ரிபப்ளிக் மால், ஹோப் காலேஜ், கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ், எம்.ஜி.ஆர் நகர், வெங்கடாபுரம், பார்க் பிளாசா, நீலாம்பூர் ஸ்டே ஷன், அவிநாசி சாலை வழி யாக 20.4 கி.மீ. செல்கிறது.

கோவையில் அவிநாசி சாலை, சக்தி சாலை, திருச்சி சாலை ஆகிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலைகளாகும். மெட்ரோ ரயில் வந்தால் போக்கு வரத்து நெரி சலை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள் ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க வெகு விரைவாக மெட்ரோ ரயில் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நெருக்கடியில் இருக்கும் போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வுகள் ஏற்படும் என கோவை மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்ப் புடன் காத்திருக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img