fbpx
Homeபிற செய்திகள்பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. செயல் அலுவலர் முத்து முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து நடைபெற்ற மன்ற கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக்த்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், தக்காளி மார்கெட்டிற்கு நிழல்கூடம் அமைப்பதற்கும் , ஆடு அடிக்கும் தொட்டி அமைப்பதற்கும், புதிய மீன் மார்கெட் அமைப்பதற்க்கும் 2.10 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 1.2 கோடி ரூபாய் மதிப்பிட்டில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும், 18வார்டு பகுதியில் உள்ள பழுதான கழிவுநீர் கால்வாய்,தெரு விளக்கு, தார்சாலை சீரமைப்பது பெயர் பலகை வைப்பது. உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img