fbpx
Homeதலையங்கம்பிரிட்டன் தேர்தல் வெற்றியும் தமிழக அரசின் திட்டங்களும்!

பிரிட்டன் தேர்தல் வெற்றியும் தமிழக அரசின் திட்டங்களும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

அவற்றில் முத்தான மூன்று திட்டங்கள்:
1.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இத்திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18.54 லட்சம் மாணவ, மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன.

மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்றுத் தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.

2.நான் முதல்வன் திட்டம்: இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் இன்ஜினியரீங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,48,149 இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

3.கலைஞரின் கனவு இல்லத்திட்டம்: வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று இருப்பதற்கு இன்னொரு சான்றாக தற்போதைய பிரிட்டன் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.

இந்த திட்டங்கள் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த துணை புரிந்துள்ளது-. பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் இடம்பெற்ற தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் தமிழக அரசின் திட்டங்களும் இடம் பெற்றிருந்தது. இதனை தமிழக அரசும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்புகள் பிரிட்டன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உள்ளது.

இது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்!-

படிக்க வேண்டும்

spot_img