fbpx
Homeபிற செய்திகள்கரூரில் மாதிரி லோக்சபா தேர்தல்

கரூரில் மாதிரி லோக்சபா தேர்தல்

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள (லிட்டில் பிளவர்) தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமை பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதன்படி, முதலாம் ஆண்டாக நடந்த தேர்தலில், மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் வாக்களித்தனர்.

முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூத் ஸ்லிப் கொடுத்து, பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று, கை விரல்களில் மை வைத்து, மாதிரி எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் வேட்பாளர்கள் நிற்கும் பல்வேறு சின்னங்களில் தாங்கள் விரும்பியவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்தினர்.

இதில் அதிக ஓட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்பு தலைவர்கள், ஓட்டளித்து லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்தனர். சபாநாயகர், பிரதமர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்களாக 13 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தேதி பதவி பிரமான நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img