fbpx
Homeபிற செய்திகள்கம்மாபுரம் ஒன்றிய வளர்ச்சித் திட்ட பணிகளை அருண் தம்புராஜ் ஆய்வு

கம்மாபுரம் ஒன்றிய வளர்ச்சித் திட்ட பணிகளை அருண் தம்புராஜ் ஆய்வு

கம்மாபுரம் ஒன்றியத்தில் நடை பெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணி களை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அருண்தம்புராஜ் வருகை தந்தார்.தொடர்ந்து அவர் கம்மாபுரம் அரசு மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஊசி போடும் இடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற இருந்த கர்ப்பிணி பெண்களிடம் வம்சம் சேவை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், புறநோயளிகள் பிரிவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து சு.கீணனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத் தில் பட்டினத்தார் வாய்க்கால் இடையே நடைபாலம் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வி.குமாரமங்கலம் ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு பொது மக்களிடம் ரேஷன் கடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கார்கூடல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப் பணிகள் நடைபெறுவ தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோ.மாவிடந்தல் ஊராட்சியில் ரூ.1கோடியே 47 லட்சம் செலவில்தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தூர்வாரி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள குளத்தையும் மற்றும் கலைஞ ரின் கனவு இல்லம் திட்டத் தின்கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாத்தமங்கலம் ஊராட்சி யில் கலைஞரின் கனவு இல் லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், சாத்தமங்கலம் மற்றும் ஊத்தாங்கால் ஊராட்சிகளில் பிரதான் மந் திரிஜன்மன் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட விருப்பாட்சி பகுதியில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் தணிகாசலம் மற்றும். வட்டார வளர்ச்சி அலுவலர் பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவகள்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img