fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தடயவியல் செவிலியர் கருத்தரங்கு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தடயவியல் செவிலியர் கருத்தரங்கு

தடயவியல் செவிலியர் துறை 21ம் நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வரும் செவிலியர் துறையாகும். அவை சுகாதார பராமரிபிற்கும் குற்றவியல் நீதி அமைப்பிற்கும் இடையே ஒரு முக்கியமான தொடர்பை வழங்குகின்றன. 

இந்நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் தடயவியல் செவிலியர் சவால்களை வழி நடத்துதல் மற்றும் வாய்ப்புகளை தழுவுதல் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கு சிறப்பு விருந்தினர்களால் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, கல்லூரி முதல்வரான டாக்டர்.நிர்மலா வரவேற்புரையுடன் துவங்கப்பட்டது.

தடயவியல் நடைமுறையில் செவிலியரின் பங்கு குற்றம் நடந்த இடத்திலிருந்து செவிலியர் பராமரிப்பு எவ்வாறு தொடங்குகிறது, பாதிக்கப்பட்டவரை ஆதரிப்பது. ஆதாரங்களைச் சேகரிப்பது, உயிர் பிழைத்தவர்களைக் பராமரிப்பது மற்றும் அவர்களின் மருத்துவச் சட்டப் பொறுப்புகள் குறித்து சிறப்புமிக்க பேச்சாளர்கள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் விவரித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இறுதியாக பேராசிரியர் சித்ரா, சமூக சுகாதார செவிலியர் துறை தலைவர்  நன்றியுரையுடன் கருத்தரங்கு  நிறைவேறியது.

படிக்க வேண்டும்

spot_img