fbpx
Homeபிற செய்திகள்கிக் குத்துச்சண்டை போட்டி- அமைச்சர் பாராட்டு

கிக் குத்துச்சண்டை போட்டி- அமைச்சர் பாராட்டு

வாகோ இந்தியா கிக் குத்துச்சண்டை கூட்டமைப்பு கோவாவில் ஜூலை 24 முதல் 28 வரை தேசிய சீனியர் மற்றும் மாஸ்டர்களுக்கான கிக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை ஏற்பாடு செய்தது. இப்போட்டியில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தங்கமும், பார்த்திபன் வெண்கலமும் வென்றனர்.

மேற்கு வங்கத்தில் ஜூலை 10 முதல் 14 வரை நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் கிக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு மாணவி குஸ்மித்தா, ஸ்ரீஹரன் ஆகியோர் தங்கம் வென்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய கராத்தே போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த நிகில் சர்வதேச பிளாக் பெல்ட் வென்றார்.

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் மற்றும் கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி பாராட்டு தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார், ஈரோடு மாவட்ட கிக் குத்துச்சண்டை சங்க பொது செயலாளர் ஏ.யூசுப், நிர்வாகிகள் ராஜா, மகேந்திரன், சங்கர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img