fbpx
Homeபிற செய்திகள்காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கிவைத்த கே.பி.முனுசாமி எம்எல்ஏ

காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கிவைத்த கே.பி.முனுசாமி எம்எல்ஏ

காவேரிப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் துணை கிளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாமினை அதிமுக துணை பொதுச்செயலாளர், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக் குமார், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், நகர செயலாளர் விமல், மாவட்ட மாணவரணி மோகன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர், ஒன்றிய கவுன்சிலர் கணேசன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் செந்தில்குமார், சேஷகிரி, முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாவட்ட தலைவர் பிரகாஷ், ஜெகதீஷ் மற்றும் மருத்துவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img