பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் வசதியாகவும், எளிதாகவும் நிதி ஆதாரங்களை பெறுவதற்கு உதவும் நோக்கத்தோடு தமிழ்நாட்டில் ‘கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி’ என்ற முன்னெடுப்பு திட்டத்தை ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த முன்னெடுப்பு திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக தங்க கடன் வழங்கும் கிளைகளாக தமிழ்நாட்டிலுள்ள தனது கிளை அலுவலகங்களை மாற்றுவதற்காக அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்துவதில் ஸ்ரீராம் பைனான்ஸ் முதலீடு செய்யும்.
தற்போது, தமிழ்நாட்டில் இயங்கிவரும் 737 கிளைகளில் 275 கிளைகள் தங்க கடன்களை வழங்கி வருகின்றன. ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட்-ன் சந்தையாக்கலுக்கான செயலாக்க இயக்குநர் எலிசபெத் வெங்கடராமன் பேசு கையில், “தங்கம் மீதான எளிதான கடன் வசதி ஒரு அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.
அதிக பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ள இக்கடன் வழிமுறை, குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலத்தின்போது பெரிதும் உதவுவதாக இருக்கும்” என்றார்.
மிதமான வட்டி விகிதங்களில் அதிகபட்சமாக 12 மாதங்கள் என்ற காலஅளவு வரை இந்த தங்க கடன்கள் வழங்கப்படுகின்றன.