திருப்பூர் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை மற்றும் பிரகாஷ் ஆர்ட் கேலரி இணைந்து நடத்தும் ஓவிய பள்ளி சார்பாக அரசு பள்ளியில் இலவச ஓவிய பயிற்சி நடைபெற்றது. இது தொடர்பாக சுவரன் மாறன் கல்வியா அறக்கட்டளை மற்றும் பிரகாஷ் கேலரி உரிமையாளர் தர்மராஜ் கூறுகையில், பள்ளியில் மட்டுமல்லாமல் எங்கள் அலுவலகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் திருப்பூர் மாவட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஓவிய ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் இலவச ஓவிய பயிற்சி நடத்தப்படும். மேலும் பயிற்சி அளிப்பதற்காக இலவச மையங்கள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.