தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் அமைந்துள்ள புதிய ஷோரூம் டார்லிங் பர்னிச்சர்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு விழா நடந்தது.
இதனை வெற்றி ரியல் எஸ்டேட் உரிமையாளர் முஸ்தபாவில் மனைவி சாராபேகம் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். மகன்கள் அஹமது, முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு பிரஸ் கிளப் மாநில செயலாளர் எ.சாதிக்பாட்சா குத்து விளக்கு ஏற்றிவைத்தார். டார்லிங் ஷோரூம் மேனேஜிங் டைரக்டர் ஜேம்ஸ், மாநில செயலாளர் தின ஓசை நாளிதழ் தேனி மாவட்ட செய்தியாளர் எ.சாதிக்பாட்சாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் நிஜாத் , ஜாபர்சேட், நாசர், ஆட்டோ சித்திக், நிருபர்கள் வேல்முருகன் மற்றும் பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.