fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் கணினி தமிழ்ப்பேரவை துவக்க விழா

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் கணினி தமிழ்ப்பேரவை துவக்க விழா

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை அரசு உதவி பெறும் பிரிவு நடத்திய கணினி தமிழ்ப்பேரவை துவக்க விழா கல்லூரியின் செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபி யோலா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்த்துறை தலைவர் மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அமுதா தேவி கணினியும் தமிழும் எனும் தலைப்பில் மனி தனின் மூன்றாவது கையாக இணையமும் அலைபேசி யும் உள்ளது என்றார்.

மேலும், தமிழ் நூல்களை இணையத்தில் வாசிப்பதற்கான தமிழ் இணைய நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகம், மதுரைத்திட்டம் எனும் இணையதளங்கள் பற் றியும், புலம் பெயர் எழுத்தாளர்களின் நூல்கள் பற்றி அறிந்து கொள்ள நூலகம் எனும் இணையதளத்தையும் மாணவிகளுக்கு சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஆதர்ஸ்.காம் எனும் இணையதளத்தில் கட்டுரை எழுதும் முறைப் பற்றியும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரின் சிறப்புரை வழியாக 500 மாணவிகள் பயன் பெற்றனர். முடிவில் இளநிலை இரண்டா மாண்டு விலங்கியல் பயிலும் மாணவி ரிதி மரியா நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.

படிக்க வேண்டும்

spot_img