fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்டத்தில் 8,792 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.65.60 கோடி வங்கி கடன், நல உதவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 8,792 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.65.60 கோடி வங்கி கடன், நல உதவிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஊரகம் மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2021 – 2022 ஆம் ஆண்டு 9,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.499.20 கோடி, 2022-2023 ஆம் ஆண்டு 10,751 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.658.62 கோடி, 2023-2024 ஆம் ஆண்டு 10,082 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.674.69 கோடி மற்றும் 2024-2025 ஆம் ஆண்டு நாளது வரை 4982 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.271.70 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 2021 -2022 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 35,556 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2169.81 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 09.09.2024 அன்று ஊரக பகுதிகளில் உள்ள 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடன் ரூ.4.07 கோடி, வங்கி நேரடி கடனாக 389 குழுக்களுக்கு ரூ.37.84 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், நகர்ப்புற பகுதிகளில் உள்ள 1 பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு வங்கி பெருங்கடன் ரூ. 0.49 கோடி, வங்கி நேரடி கடன் 262 மகளிர் சுய உதவிக்கழுக்களுக்கு 22.83 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு இணை மானியமாக ரூ.0.37 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 660 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 8,792 மகளிருக்கு ரூ.65.60 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சக்தி மகளிர் சுய உதவிக்குழுவினர் நன்றி தெரிவித்து கூறியதாவது:
என் பெயர் மஞ்சு. நாங்கள் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறோம்.

எங்கள் குழுவின் பெயர் சக்தி மகளிர் சுய உதவிக்குழு. நாங்கள் எங்கள் குழுவின் சார்பில் 8 பேர் இணைந்து 5 மாதங்களுக்கு முன்பு ரூ.30 இலட்சம் பெற்று டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்துள்ளோம்.

இதன் மூலம் வருகின்ற வருமானத்தில் எங்கள் குடும்பத்தை நாங்கள் நடத்தி வருகின்றோம். நாங்கள் கடன் வாங்கியது முதல் தொடர்ந்து வங்கியில் இ.எம்.ஐ கட்டி வருகிறோம். இப்பொழுது எங்கள் தொழிலை விரிவுப்படுத்த கூடுதலாக ரூ.20 லட்சம் கடனுதவி பெற்றுள்ளோம்.

இதன் மூலம் எங்கள் சொந்த காலில் எங்களால் நிற்க முடிகிறது. இவ்வாறு பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி எங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, சிவநாயக்கன்பட்டியை சேர்ந்த மகிளம்பூ சுரபி மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்ததாவது:
நாங்கள் நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, சிவநாயக்கன்பட்டியில் கடந்த 15 வருடங்களாக மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறோம். நாங்கள் அரசின் சார்பில் தொழில் கடனுதவிகள் பெற்று தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறோம்.

இப்பொழுது நாங்கள் 5 வது முறையாக கடனுதவி பெறுகிறோம். ஏற்கனவே ரூ.9 லட்சம் வரை கடனுதவி பெற்றிருந்தோம். அதனை முதலமைச்சர் ஐயா அவர்கள் கடன் தள்ளுபடி செய்துள்ளார்கள். தற்போது ஆடு, மாடு வளர்ப்பு தொழில் மேற்கொள்ள ரூ.14 லட்சம் கடனுதவி பெற்றுள்ளோம்.

தற்போது மாடு வளர்ப்பு தொழிலை விரிவாக்கம் செய்ய உள்ளோம். மாடு வளர்ப்பு தொழில் மூலம் பால் விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறோம். தற்போது கிடைத்த கடன் மூலம் மேலும் எங்களால் தொழிலை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இத்தகைய சிறப்பான திட்டங்கள் மூலம் எங்களை போன்ற ஏழை, எளிய பெண்களுக்கு கடனுதவி வழங்கி சுய தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் முதலமைச்சர் ஐயா அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொகுப்பு:
தே.ராம்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நாமக்கல் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img