fbpx
Homeபிற செய்திகள்ஐசிசி ஹெல்த்கேர் மாநாட்டில் இந்தியாவை ஆரோக்கியமாக்க வலியுறுத்தல்

ஐசிசி ஹெல்த்கேர் மாநாட்டில் இந்தியாவை ஆரோக்கியமாக்க வலியுறுத்தல்

இந்தியாவை ஆரோக்கி யமான இடமாக மாற்ற மருத்துவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே வலியுறுத்தினார்.
நகரில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் இந்திய வர்த்தக சபை சார்பில் சுகாதார வணிகத்தைப் புரிந்து கொள்வது குறித்து ஐசிசி-ஹெல்த்கேர் உச்சி மாநாடு நடைபெற்றது.

இதில் நீரிழிவு நோயாளி களின் எண்ணிக்கை அதிக ரித்து வருவது குறித்து கவலையை எழுப்பிய முன் னாள் சுகாதார துறை அமைச்சர் ஹண்டே, நகரில் உள்ள டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது 1/3 பேர் நீரிழிவு நோயாளிகள் என்று சுட்டிக்காட்டிய மருத்துவர், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 40% மக்கள் நீரிழிவு நோயாக மாறுவார்கள்” என்றார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு இந்திய வர்த்தக சபையின் தலைவர் ஷிவ்குமார் ஈஸ்வரன், காவேரி மருத்துவமனை யின் நரம்பியல் அறிவியலுக் கான குழு ஆலோசகராக இருக்கும் ஐசிசி ஜிழி இன் ஹெல்த்கேர் கமிட்டியின் தலைவரான டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர், அப்பல்லோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனீதா ரெட்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றி, சுகாதாரத் துறையில் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img