fbpx
Homeபிற செய்திகள்வள்ளியூர் மரியா கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

வள்ளியூர் மரியா கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக (வெள்ளிக்கிழமை) ‘இலக்கியமும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி நிறுவனர் பொறியாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தமிழ்த்துறை உதவி பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சுபி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுஷ்மா ஜெனிபர் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் தமிழ்த்துறை தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ரெத்ன ஷீபா மினி கருத்தரங்க அறிக்கையினை சமர்ப்பித்தார். கருத்ரங்க முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அனிதா சோபியா மார்கிரேட் ‘இலக்கியங்களில் மனித சமூகம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். முடிவில் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் ஜெய சோபியா நன்றி கூறினார்.

இரண்டாம் அமர்வில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் யா.லலிதா வரவேற்புரை நிகழ்த்த, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அலக்ஸ் ஜேக்கப் ‘இலக்கி யமும் பண்பாடும்’ என்ற தலைப்பில் கருத்து¬ ரயாற்றினார். மேலும் நிகழ்வில் 10க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கட்டுரையை சமர்பித்தனர். கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் இறுதியாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மணிமேகலை நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img