fbpx
Homeபிற செய்திகள்மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கரூரில் 3,83,227 பேர் பயன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கரூரில் 3,83,227 பேர் பயன்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மை யான கல்வியும், மருத்துவமும் தமிழ்நாட்டில் அனை வருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பான நடவ டிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் கூறியுள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவத்திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 8,59,360 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 1,79,896 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சையும், 84,055 நபர்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், 79,268 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், 15,205 நோய் ஆதரவு சிகிச்சையும் மற்றும் 24,803 நபர்கள் இயன்முறை சிகிச்சையும் என மொத்தம் 3,83,227 நபர்களுக்கு மக்களைத்தேடி மருத்துவத்திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் பயன்பெற்று வருகின் றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பயனாளி பாக்கியம் கூறியதாவது:

என் பெயர் பாக்கியம். எனக்கு வயது 64. நானும் எனது கணவரும் கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டி பகுதியில் வசித்து வருகின்றோம். எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாதமும் பேருந்து மூலம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக நேரில் எனது மகன் அழைத்து செல்வார். ஆனால் சமீபமாக மக்களைத் தேடி மரகரூவம் என்ற திட்டத்தில் எனது வீட்டிற்கே செவிலியர் மற்றும் சுகாதார பணி தன்னார்வலர்கள் நேரில் வந்து என் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தினை பரிசோதித்து எனக்குத் தேவையான மாத்திரைகளை வழங்குகின்றனர். முதல்வருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img