fbpx
Homeபிற செய்திகள்கோவை கதிர் கலை - அறிவியல் கல்லூரியில் புலவர்கள் வரலாறு அறிதல் - மாணவர் திறன்...

கோவை கதிர் கலை – அறிவியல் கல்லூரியில் புலவர்கள் வரலாறு அறிதல் – மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கலையியல் புலம் மற்றும் சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் இணைந்து அருளாளர்கள் மற்றும் புலவர்கள் வரலாறு அறிதல் என்ற மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.

கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். கற்பகம் வாழ்த்துரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக சிரவை ஆதினத் தலைவர் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் பங்கேற்று அருளாளர்கள் மற்றும் புலவர்கள் குறித்த வரலாறு என்ற அடிப்படையில் சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு அருளாசி வழங்கினார்.

மேலும் திருக்கோயில், மடாலயம், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக பார்த்து அவற்றின் வரலாறு குறித்து அறிந்து கொண்டனர். இந்நிகழ்வில் 30 மாணவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை தமிழ்த்துறை கலையியல் புலத்தின் தலைவர் மு.வினோதினி ஏற்பாடு செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img