fbpx
Homeபிற செய்திகள்கற்கும் திறனை மேம்படுத்துவதற்காக, அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய நவீன வசதிகள் -வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்...

கற்கும் திறனை மேம்படுத்துவதற்காக, அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய நவீன வசதிகள் -வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பெருமிதம்

நாமக்கல் மாவட்டம் இராசி புரம் வட்டத்தில் கார்கூடல்பட்டி, நாரைக் கிணறு, முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை மற்றும் மூலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில், அமைச்சர் மா.மதிவேந்தன் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்களி டம் கோரிக்கை மனுகளையும் அமைச் சர் பெற்றுக்கொண்டு அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் நாரைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாரைகிணறு ஊராட்சியில் ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 எதிர் சவ்வூடு பரவல் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுக ளில் பங்கேற்ற அமைச்சர் மா.மதி வேந்தன் மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக் கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, முள்ளுக்குறிச்சி பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தமிழ்நாடு அரசு, பள்ளி மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரித்து வழங்கி வருகிறது. தேவையான நவீன வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்த அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது என்றும் இவற்றை பயன்படுத்திக் கொண்டு மாணவ மாணவிகள் நன்கு கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. இராமசுவாமி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img