fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த வேலூர் சரக டி.ஜ.ஜி.

முதல்வர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த வேலூர் சரக டி.ஜ.ஜி.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகிலுள்ள சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தேவராணி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன், அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img