fbpx
Homeபிற செய்திகள்நந்தா செவிலியர் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

நந்தா செவிலியர் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

வேலூர் சி.எம்.சி செவிலியர் கல்லூரியில் “கான்பெஸ்ட் 2024” என் கிற தலைப்பில் மாநில அளவிலான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 20க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரிகளிலிருந்து 310 மாணவ மாண விகள் பங்கு பெற்றார்கள். இவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் மேஜைப் பந்தாட்டம், 100 மீட்டா மற்றும் 200 மீட்டர் ஓட் டப்ந்தயங்கள், நீளம் தாண்டுதல் போன்ற போட் டிகளில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

போட்டிகளில் பல்வேறு சுற்றுகளை கடந்து, ஒவ் வொரு போட்டியிலும் நந்தா செவிலியர் மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டார்கள். அனைத்துப் போட்டிகளின் முடிவில் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் மாநிலத்தி லேயே இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை புரிந்தார்கள்.

இச்சாதனைகளை நிகழ்த்திய மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக வழி நடத்திய முதல்வர் ஆர். வசந்தி மற்றும் ஆசிரி யர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் மற்றும் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறு வனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலு வலர் முனைவர் கே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாராட்டினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img