fbpx
Homeபிற செய்திகள்கண்ணா சில்க் - அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

கண்ணா சில்க் – அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

தூத்துக்குடியில் இன்று (24.09.2024) பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணா சில்க் யின் 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் காலை 9 மணி யளவில் தொடங்கி மதியம் 1 மணிவரை நடைபெற்றது.

கண்புரை நோயாளி களுக்கு ஆபரேஷன் இலவ சமாகவும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள் ளெழுத்து, உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் கண்ணா சில்க் சார்பாக முகாம் இடத்திலேயே வழங்கப்பட்டது.

கண் புரை நோயாளிகள் முகாம் நடக்கக்கூடிய இன்றைய தினத்தில் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு லென்சு பொருத்தி நவீன முறை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மீண் டும் இலவசமாக மறு பரிசோதனை செய்யப்படும். மேலும் உயர் ரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய், அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள தகுதிச் சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரையுடன் முகாமிற்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாட்டை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவி யுடன், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண்ணா சில்க் சிறப்பாக செய்திருந்தனர்.

முகாமில் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்து வமனை மருத்துவர், கார்த்திகேயன் டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணா சில்க் உரிமையாளர் பாலாஜி அலுவலக மேலாளர் துரை அதிகாரிகள், பணி யாளர்கள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img