fbpx
Homeபிற செய்திகள்உயர் கல்வி குறித்து இணைய வழி சிறப்புச் சொற்பொழிவு

உயர் கல்வி குறித்து இணைய வழி சிறப்புச் சொற்பொழிவு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி மற்றும் முதுகலைத் தமிழ் உயராய்வு மையம் இணைந்து சேவியர் உயர் கல்வி திட்டக்குழு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நடத்திய இணைய வழி சிறப்புச் சொற்பொழிவு நேற்று நடைபெற்றது.

இதில் நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா, பெரிய குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சேசு ராணி, செயலர் முனைவர் சாந்தா மேரி ஜோஷிற்றா, இல்லத்தலைமை முனைவர் பாத்திமா மேரி சில்வியா ஆகியோர் தலைமையில் நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப.மகேஸ்வரி வரவேற்புரை நடைபெற்றது.

இதில் அர்ஜீன் தொழில்நுட்பக் கல் லூரி பேரா.மு.சிவசக்தி நற்செயல்கள் செய்பவர்கள் சான்றோர்கள் ஆகிறார்கள் என்று எடுத்துரைத்தார்.

இதில், முதுகலைத் தமிழ் உயராய்வு மையத்தின் தமிழ்த்துறைத்தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் ஞா.பிரான்சிஸ் கேதரின் மற்றும் துறைப்பேராசிரியர்கள், மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி இணைப்பேராசிரியர் புளோரா பவுலின் மேரி நன் றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img