fbpx
Homeபிற செய்திகள்மாரடைப்பு பாதிப்பு விழிப்புணர்வு ‘பல்ஸ் ஹார்ட்டத்தான்’ ஓட்டம்: 1000 பேர் பங்கேற்றனர்

மாரடைப்பு பாதிப்பு விழிப்புணர்வு ‘பல்ஸ் ஹார்ட்டத்தான்’ ஓட்டம்: 1000 பேர் பங்கேற்றனர்

கோவை ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் 18 ரோட்டரி சங்கங்கள் இணைந்து 30 முதல் 40 வயதுடையவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு “பல்ஸ் ஹார்ட்டத்தான்” வாக் – ஜாக் – ரன் – ஜாக் – வாக் நிகழ்வு கோவையில் நடைபெற்றது.

இதுகுறித்து ரோட்டரி கிளப் இளைஞர்கள் பிரிவு மாவட்டத் தலைவர் ரோட்டேரியன் எ. காட்வின் மரியா விசுவாசம் கூறியதாவது:- இளம் வயதில் மாரடைப்பு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் 18 – ரோட்டரி சங்கங்கள், எஸ். பி. டி மருத்துவமனை மற்றும் கோவை மாவட்ட அத்லட்டிக் அசோசியேசன் ஆகியவை இணைந்து “பல்ஸ் ஹார்ட்டத்தான்” ஓட்டத்தை நடத்தியது.

கோவை ராம்நகர் எஸ்.பி.டி. மருத்துவமனையில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெற்ற இந்த ஓட்டத்தை ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட் டது. முதலில் நடந்து செல்வது, மெதுவாக ஓடுவது, ஓட்டமாக ஓடுவது, பின்னர் மெதுவாக, ஓடுவது, நடப்பது என்று இதில் 5 விதமாக நடைபெற்றது.

இந்த “பல்ஸ் ஹார்ட்டத்தான்” ஓட் டத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் எ.கே.எஸ். என். சுந்தர வடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் முன்னிலை வைத்தார்.

5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஓட்டம் வ.உ.சி. மைதானத்தில் முடிவடைந்தது. இதில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கத்தினர், அரசு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேற்கண்டவாறு அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.டி. மருத் துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.சுப்பு ராஜா எஸ்.பி.டி. மருத்துவமனை சேர்மன் டி. சுசீலா, ரோட்டரி சங்க இணைச் செயலாளர் சுப்பு, ஒருங்கிணைப்பாளர் பத்மகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img