fbpx
Homeபிற செய்திகள்நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலி: கேரள எல்லை சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலி: கேரள எல்லை சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலம் மலப்புரத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரில் படித்து வந்த நிலையில் அண்மையில் சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது.இதனையடுத்து உறவினர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக பலியானார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இளைஞர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளது. பணி நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் இரு மாநிலத்தினரும் கோவைக்கும், கேரளாவிற்கும் சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக – கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர் முகாமிட்டு சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக காரமடை அடுத்துள்ள கேரள எல்லைப்பகுதிகளான கோபனாரி, முள்ளி சோதனை சாவடிகளில் வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் மேற்பார்வையில் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் இரு செவிலியர்கள், ஒரு மருந்தாளுநர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அதில் கேரள மாநிலத்திலிருந்து காரமடை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.காய்ச்சல் இருந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்களது டிராவல் ஹிஸ்டரி முழுவதுமாக கண்காணிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறுகையில் தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரஸால் பாதிப்பு ஏதுமில்லை.இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மூலம் கேரளா எல்லையோர பகுதி சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img