fbpx
Homeபிற செய்திகள்கைவினைக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் கம்பள உத்சவ்

கைவினைக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் கம்பள உத்சவ்

ஜெய்ப்பூர் ரக்ஸ், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலாச்சார நிகழ்வான “கம்பள உத்சவ்” நிகழ்வை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவானது, வணிகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கொண்டாட்டமாகும். இது கிராமப்புற இந்திய கைவினைஞர்களின் கலைத்திறன் மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வித்யாசமான ரசனைகளை ஒன்றிணைக்கிறது.

இந்த உத்சவ் நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நிகழ்ச்சியின் மூலம் அதன் வருவாயை 50 கோடி ரூபாயாக உயர்த்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கைவினை கலைஞர்களின் திறமையை போற்றி கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை ஜெய்பூர் ரக்ஸ் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வின் மூலம் அவர்களின் படைப்புகளை உலகளாவிய வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

கிராமப்புற இந்தியாவின் இதயத்தில் ஒரு கலாச்சார பயணத்தை பிரதிபலிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img