fbpx
Homeபிற செய்திகள்இந்திரா குழும நிறுவன தலைவருக்கு ‘கல்வி வளர்ச்சியின் முன்னோடி’ விருது: ராமகிருஷ்ணா கல்லூரி விழாவில் வழங்கப்பட்டது

இந்திரா குழும நிறுவன தலைவருக்கு ‘கல்வி வளர்ச்சியின் முன்னோடி’ விருது: ராமகிருஷ்ணா கல்லூரி விழாவில் வழங்கப்பட்டது

கோவை நவ இந்தி யாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், “சிறந்த உலகை உருவாக்குவோம்” என்ற கல்லூரி மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கலையரங்கில் நேற்று (25ம் தேதி) நடைபெற்றது. ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் ஸ்வாதி ரோஹித் விழாவிற்குத் தலைமை வகித்து, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, புனே, இந்திரா குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் ஸ்ரீ சாணக்யா கல்வி குழுமங் களின் தலைமை நிர்வாக அறங்காவலர் முனைவர் தரிதா சங்கருக்கு, “கல்வி வளர்ச்சிக்கான முன்னோடி” என்ற விருது வழங்கி கௌரவித்தார்.

அதைத்தொடர்ந்து முனைவர் தரிதா ஷங்கர் சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது: “இந்த உலகின் தனித்துவமான சக்தியே பெண்கள் தான். பெண்க ளிடம் உலகை ஆளுகின்ற சக்தி நிறைந்துள்ளது. உலகின் நேற்று, இன்று, நாளை என்றால் மூன்றும் பெண்களே. நாளைய உலகைப் படைப்பதே பெண்கள் தான்.
பெண்கள் அனைத்து நிலைகளிலும் ஒழுக்கமுடை யவர்களாக விளங்க வேண்டும்.

கல்விதான் நம்முடைய அறிவுக்கான அடிப்படை. கல்வியால் மட்டுமே அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இறைவனின் படைப்பில் பெண்கள் அற்புதமானவர்கள். தாமும் மகிழ்ச்சியாக இருந்து, நம்மைச் சுற்றி யுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்பவர்கள் பெண்கள். உங்களை நீங்களே ஊக் கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பம், சமுதாயத்தில் பெண்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அதை செயல்படுத்த உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

பெண்கள் நலனில் பெண்கள் தான் அக்கறை செலுத்த வேண் டும். மற்றவர்கள் மீது அன்பு காட்ட வேண்டும். நீங்கள் எந்த நிலைக்குச் சென்றாலும், பெற்றோரை கைவிட்டு விடக்கூடாது. அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். எங்கே நாம் பேச வேண்டிய சூழல் உருவாகிறதோ? அங்கே தயங்காமல் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில், மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பெண்கள் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா, செயலாளர் முனைவர் ஆர்.ரேகா மற் றும் நிர்வாகிகள் செய் திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img