fbpx
Homeபிற செய்திகள்காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு துவக்கம்

காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு துவக்கம்

இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட இடையீட்டு சிகிச்சையை வழங்குவதற்கென
வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை இந்தியாவின் முதல் ஒருங்கி ணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவை துவங்கியுள்ளது.

சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப்பிற்கு வழிவகுக் கக்கூடும் என்பதால், இது நிகழாமல் தடுப்பதே இந்த புதுமையான நடவடிக்கைக்கான காரணமாகும்.
இம்மருத்துவமனை உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் நிலைமையை சீராக்க மக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட் (MCS) சாதனங்களை ஒருங்கி ணைக்கிறது.

இந்நிலையில், இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி மையத்தின் இதய பராமரிப்பு மையத்தின் தலைவர் & இயக்குநர் தணிகாசலம் மற்றும் காவேரி மருத் துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img