fbpx
Homeபிற செய்திகள்கள்ளக்குறிச்சியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச் சர் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் கள். இதில் உளுந்தூர் பேட்டை ஒன்றியம், பிடா கம் ஊராட்சி, பிடாகம் கிராமத்தில் 15வது நிதிக் குழு மானியத் திட்டத் தின்கீழ் ரூ.9.69 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வரும் கிணறு அமைத்தல் பணி, பிடாகம் காவல் நிலையம் பின்புறம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நூலகக் கட்டிடம் கட்டுமானப் பணி, பிடாகம் உட்கோட்டை பகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2 வீடுகள் கட்டு மானப் பணியையும், கீழப்பா ளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.12.25 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கிணறு அமைத்தல் பணியையும் பார்வையி டப்பட்டது.

தொடர்ந்து மூலசமுத் திரம் ஊராட்சி, மூலசமுத் திரம் கிராமத்தில் விளையாட்டு மைதா னம் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.60,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் பணி, கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியையும், உளுந்தூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் உள்ள அரசு சிமெண்ட் குடோனையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பணிகளில் உரிய விதிமுறை களின்படி கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்வதுடன் இத்திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு பெற்ற திட்டப் பயனாளிகளில் பணி தொடங்காதவர்கள் விரைவாக பணியைத் தொடங்கவும், முடிவுற்ற திட்டப் பணிகளை பயனாளிகளிடம் விரை வாக ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img