fbpx
Homeபிற செய்திகள்தென் மண்டல ஹாக்கி போட்டியில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி முதலிடம்

தென் மண்டல ஹாக்கி போட்டியில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி முதலிடம்

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சிபிஎஸ்இ தெற்கு மண்டலம்-1 அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த செப்.22 முதல் வரும் செப்.26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும், புதுச்சேரி, அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் இருந்தும் 56 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் பிரிவில் 68 அணியினர், மாணவியர் பிரிவில் 35 அணியினர் என மொத்தமாக 1854 மாணவ, மாணவியர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
14,17 மற்றும் 19 வயதிற் குட்பட்டோருக்கான பிரிவுகளில் நாக்-அவுட் மற்றும் லீக் சுற்றுகள் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 14,17,19 வயதுக் குட்பட்டோருக்கான மாணவர் மற்றும் மாணவியர் என ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.


இதில் 5 பிரிவுகளில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி முதல் இடத்தைப்பிடித்து சாதனை படைத்தது. 14 வயதிற்குட்பட்டோருக்கான மாணவியர் பிரிவில் சென்னை ஐசிஎப் வித்யா நிகேதன் பள்ளி முதல் இடத்தை பிடித்தது.


தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன் தலைமையில் நிர்வாக அறங்காவலர் ராமசாமி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை தீவிரவாததடுப்பு பிரிவு எஸ்பி பத்ரி நாராய ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு கோப்பைகளை வழங்கி கௌரவித்தார். மேலும், தனித்திறன் மாணவர்களுக் கும் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நிகழ்ச்சிகள் நிறைவாக துணை முதல்வர் சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img