fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் பகுதி நேர நியாய விலைக்கடை: அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்துவைத்தார்

நீலகிரியில் பகுதி நேர நியாய விலைக்கடை: அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்துவைத்தார்

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி, நெல்லியாம்பதி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, மகளிர்களுக்கான பகுதி நேர நியாய விலைக்கடையினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்துவிளக் கேற்றி, துவக்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித் தார். முன்னதாக அமைச்சர் கா.ராமச் சந்திரன் நடுவட்டம் பேரூராட்சி அனுமாபுரம் என்ற பகுதியிலும் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையையும், சேரங்கோடு ஊராட்சி, வெட்டுவாடி மகளிர் நியாய விலைக்கடையையும், சேரம்பாடி சுங்கம் நியாய விலைக்கடையையும், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல் வேறு மக்கள் நலத்திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
பந்தலூர் வட்டம், வெட்டுவாடி மற்றும் சேரம்பாடி சுங்கம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறையின் கீழ் இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்ததற்கு மாற்றாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் தலா ரூ.15.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட 2 புதிய நியாய விலை கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சேரங்கோடு ஊராட்சி, நெல்லியம்பதி மற்றும் நடுவட்டம் பேரூராட்சி, அனுமாபுரம் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலைக்கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முகமது ரிஸ் வான், கூடலூர் ஊராட்சி ஒன்றி யத்தலைவர் கீர்த்தனா, முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நகராட்சித் தலைவர்கள் பரிமளா (கூடலூர்), சிவகாமி (நெல்லியாளம்), நடுவட் டம் பேரூராட்சித் தலைவர் கலியமூர்த்தி, துணைத்தலைவர் துளசி, சேரங்கோடு ஊராட்சித் துணைத்தலைவர் சந்திரபோஸ், வட்டாட்சியர்கள் கிருஷ்ணமூர்த்தி (கூடலூர் (பொ)), கிருஷ்ணமூர்த்தி (பந்தலூர்), நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், 11-வது வார்டு உறுப்பினர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img