fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் வளர்ச்சி திட்டப்பணிகள் திறந்து வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் வளர்ச்சி திட்டப்பணிகள் திறந்து வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சிக்குட்பட்ட சின்னகரும்பாலத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினையும், மேலூர் ஊராட்சி, கொலக்கம்பை கைகாட்டி சாலை முதல் டிக்லேண்ட் லீஸ் கிராமம் வரை நபார்டு திட்டத் தின்கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையையும், மேலூர் ஊராட்சிக் குட்பட்ட ஆருகுச்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினையும், அதிகரட்டி பேரூராட்சிக் குட்பட்ட முட்டிநாடு பகுதியில் வாடகை கட் டடத்தில் இயங்கி வந்த முழுநேர நியாய விலைக்க டையினை, (410 குடும்ப அட்டைகள்) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக் கப்பட்ட நியாய விலைக்கடையினையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர் களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர், குந்தா வட்டத்திற்குட்பட்ட பி-மணியட்டி என்ற பகு தியில் இயங்கிவரும் நியாய விலைக் கடையி லுள்ள 569 குடும்ப அட்டைகளில், 135 குடும்ப அட்டைகளை பிரித்து, சி-மணியட்டி என்ற பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும்
வகையில், புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் சுற்று லாத்துறை அமைச்சர் கூறி யதாவது:
நீலகிரி மாவட்டத்தி லுள்ள உதகை, குன் னூர், கோத்தகிரி மற் றும் கூடலூர் அரசு மருத் துவமனைகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவம னைக்கு இணையாக பல் வேறு சிகிச்சைகள் மற்றும் பரி சோதனைகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், அனுப வம் வாய்ந்த அரசு மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு வருவதால் நோயாளிகள் தனியார் மருத்துவமனை செல்வதிலிருந்து மாறி அரசு மருத்துவமனைக்கு வரு கிறார்கள்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு எந்தவித நோய் ஏற்பட்டாலும் அரசு மருத் துவமனையை அணுக வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித் துறை மூலம் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு இடங்களில் பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அமைச்சர் என்ற முறையில் ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென்று அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.

நமது மாவட்டத்தில் விடியல் பயணம் திட் டத்தின்கீழ் 90 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 80,000 முதல் 90,000 மகளிர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட வழங் கல் அலுவலர் ரவிச்சந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img