fbpx
Homeபிற செய்திகள்இதயம், நுரையீரல் பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நடத்திய ரேலா மருத்துவமனை

இதயம், நுரையீரல் பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நடத்திய ரேலா மருத்துவமனை

உலகமெங்கும் செப்டம்பர் 25 மற்றும் செப்டம்பர் 29ல் அனுசரிக்கப்படும் உலக நுரையீரல் தினம், உலக இதய தினத்தையொட்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு 5 கி.மீ. தூரத்திற்கான வாக்கத்தான் நிகழ்வை ரேலா மருத்துவமனை நடத்தியது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

ரேலா மருத்துவமனையின் தலைமை செயல்அதிகாரி டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி, மருத்துவ இயக்குனர் டாக்டர். கௌதமன், இதய அறிவியல் மையத்தின் இயக்குனர் மற்றும் முதுநிலை மருத்துவர் டாக்டர். ஸ்ரீநாத் விஜயசேகரன் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் கிளினிக்கல் லீட்–டாக்டர். ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்வை தாம்பரம் மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, செப்டம்பர் 29ம் தேதி இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கான ஒரு இலவச மருத்துவ முகாமையும் இம்மருத்து வமனை நடத்துகிறது.

இந்த இலவச பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான பதிவை செய்வதற்கு 86106 82479 என்ற எண்ணை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img