fbpx
Homeபிற செய்திகள்மனிதாபிமானத்தால் உயிர் பெற்ற 11 வயது சிறுவனுடன் சந்திப்பு

மனிதாபிமானத்தால் உயிர் பெற்ற 11 வயது சிறுவனுடன் சந்திப்பு

மனிதாபிமானத்தின் நற்பண்பை எடுத்துரைக்கும் இந்த மனதைத் தொடும் நிகழ்வில், ஃபான்கோனி அனீமியாவில் இருந்து காப்பாற்றப்பட்ட திருச்சியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் செல்வாவும் அவரது உயிரைக் காப்பாற்ற ரத்த ஸ்டெம் செல் தானமளித்த பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் பார்மசிஸ்ட் டாக்டர்.ஸ்மிதா ஜோஷியும் முதன்முறையாகச் சந்தித்தனர். 

டாக்டர் அருணா ராஜேந்திரனின் கீழ் சிகிச்சை பெற்ற செல்வா, அவர் பெற்ற ரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையால் புது வாழ்வு பெற்று, தற்போது 7ம் வகுப்பில் படித்து வருகிறார்.

டாக்டர். ஸ்மிதா ஜோஷி, மற்றவர்களுக்கு உதவுவதில் கொண்டுள்ள ஆர்வத்தால் உந்தப்பட்டு DKMS BMST அறக்கட்டளையில் ஸ்டெம் செல்லை தானமாக அளித்தார்.

இது குறித்து செல்வா பெற்றோர் கூறுகையில்,”எங்கள் மகனின் உயிரைக் காக்க உதவிய டாக்டர் ஸ்மிதா ஜோஷியின் இச்செயலுக்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.

செல்வாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்க செல்வாவின் பெற்றோர்கள் வசதியற்ற நிலையில் இந்த உயிர்காக்கும் சிகிச்சையான ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையை செல்வா பெற DKMS-BMST அவருக்கு உதவி புரிந்தது.

படிக்க வேண்டும்

spot_img