fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் முதல் இன்டலிஜென்ட் சியுவி விலை அறிவிப்பு

இந்தியாவின் முதல் இன்டலிஜென்ட் சியுவி விலை அறிவிப்பு

ஜேஎஸ்டபுள்யு எம்ஜி மோட்டார் இந்தியா, சமீபத்தில் அறிமுகம் செய்த எம்ஜி விண்ட்ஸர் காரின் விலைகளை அறிவித்திருக்கிறது. ரூ.13,49,800 என்ற தொடக்க விலையில் வெளிவரும் இந்தியாவின் முதல் இன்டலிஜென்ட் CUV, ஒரு செடானின் வசதியையும் மற்றும் ஒரு SUV-ன் இடவசதியையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பிசினஸ் அனுபவத்தை வழங்குகிறது.

எதிர்காலத்திற்குரிய ஏரோடைனமிக் வடிவமைப்பு தாராள இடவசதி கொண்ட ஆடம்பரமான உட்புற அம்சங்கள், உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பு, ஸ்மார்ட் இணைப்பு வசதி, டிரைவிங் சௌகரியம் மற்றும் பல உயர்தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த CUV வெளிவருகிறது. 

இது ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் ஒயிட், க்ளே பெய்ஜ், மற்றும் டர்க்கைஸ் கிரீன் வண்ணங்களில் வருகிறது.

ஜேஎஸ்டபுள்யு எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி சதீந்தர் சிங் பாஜ்வா பேசுகையில், 

“ கவர்ச்சிகரமான சலுகை தொகுப்பு மற்றும் விலை நிர்ணயத்தின் வழியாக மின்வாகன லைஃப்ஸ்டைலுக்கு வாடிக்கையாளர்கள் தங்களை தரம் உயர்த்தி கொள்வதை எம்ஜிஎம் விண்ட்ஸர் ஏதுவாக்கும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img