fbpx
Homeபிற செய்திகள்எம்எஸ் தோனியின் கையொப்பம் அடங்கிய பிளாட்டினம்: வரவேற்பை பெற்றுள்ளது

எம்எஸ் தோனியின் கையொப்பம் அடங்கிய பிளாட்டினம்: வரவேற்பை பெற்றுள்ளது

பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் (PGI) அமைப்பின் இந்திய மென் ஆஃப் பிளாட்டினம் பிரிவில், எம்எஸ் தோனி சிக்னேச்சர் கலெக்‌ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் எழுச்சியூட்டும் மதிப்புகள் என்றென்றும் அழியாததாக உங்களுடன் கலந்திருக்கும்.

இது குறித்து பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய நிர்வாக இயக்குனர் வைஷாலி பானர்ஜி கூறுகையில், 

“இந்த தனித்துவமான கலெக்‌ஷனில் எம்எஸ் தோனியுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பாக்கியம் மற்றும் மரியாதை. கலெக்‌ஷனில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அவரது கையொப்பத்தைக் கொண்டுள்ளது, இது உண்மையிலேயே சிறப்பானது” என்றார். 

MS தோனி இது குறித்து பகிர்ந்து கொள்கையில், “இந்த சிறப்பு கலெக்‌ஷனில் மென் ஆஃப் பிளாட்டினத்துடன் ஒத்துழைப்பது ஒரு மரியாதைக்குரிய விஷயமாகும்.  பிளாட்டினம், அதன் வலிமை, அரிதான மற்றும் நீடித்த குணங்கள், எனக்கு எப்போதும் தனித்து நிற்கிறது. எனது கையொப்பத்துடன் குறிக்கப்பட்ட இந்தத் கலெக்‌ஷன் ஆனது தனிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img