fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அமைச்சர்கள் பங்கேற்று உரை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அமைச்சர்கள் பங்கேற்று உரை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வனத்துறை அமைச்சர் க.பொன்முடி,வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவின் சார்பாகத் மாணவர்களுக்குகான பேச்சுப் போட்டியினை மாவட்டந்தோறும் கல்லூரி அளவில்,பல்கலைக்கழக அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.கடலூரில், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்திலும் முதற்கட்டமாகப் பேச்சுப்போட்டி நிகழ்த்தப்பெற்று.

இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மீண்டும் அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பேச்சுப்போட்டி நடத்தப்பெற்றது. அப்போட்டியில் தமிழ்நாடு அரசு சார்பாக முதலிடம் வெற்றி பெற்றவருக்கு ரூ.10,000 தொகையும், இரண்டாவதிடம் வெற்றி பெற்றவருக்கு ரூ.6,000 தொகையும், மூன்றாவதிடம் வெற்றி பெற்றவருக்கு ரூ.4,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவின் சார்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ.5,00,000 மதிப்பீட்டில் மாணவர்களுக்காக கலைஞர் தமிழ் மன்றம் அமைக்கப்பெற்றது. இம்மன்றத்தின் சார்பாகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி,
கவிதைப்போட்டி நடத்தப்பெற்று, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றது.

அமைச்சர்கள் பேசுகையில், டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய சட்டங்களும், திட்டங்களும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.இதற்கு முக்கிய காரணம் கலைஞர் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்களே ஆகும், என்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ.) இரா.சிங்காரவேல், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img