fbpx
Homeபிற செய்திகள்நெய்வேலி என்.எல்.சி.யில் ‘தூய்மையே சேவை’ என்ற இயக்கத்தின் மூலம் தூய்மைப்பணி

நெய்வேலி என்.எல்.சி.யில் ‘தூய்மையே சேவை’ என்ற இயக்கத்தின் மூலம் தூய்மைப்பணி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கப்பட்ட தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2024 செப்.15 முதல் அக்.2 வரை, என்எல்சி இந்தியா நிறுவனம்,நெய்வேலி மற்றும் அதன் வெளி மாநில துணைத் திட்டங்கள் அமைந்துள்ள இடங்களில், ‘தூய்மையே சேவை’ என்ற இயக்கத்தின் மூலம், துப்புரவு பணிகளை நடத்தி வருகிறது.

இந்த தூய்மைப்பணி இயக்கத்தின் ஒரு பகுதியாக, ‘தூய்மையே சேவை’ என்ற வெகுஜன துப்புரவு நிகழ்ச்சியானது, என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நேற்று(திங்க கிழமை)காலை நெய்வேலி மத்திய பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அண்ணா மைதானத்தில், என்எல்சி இந்தியா நிறுவன இயக்குனர்கள் டாக்டர் சுரேஷ் சந்திர சுமன் (இயக்குநர், சுரங்கங்கள் துறை, இயக்குநர்(பொறுப்பு). திட்டங்கள், செயலாக்கத்துறை),சமீர்ஸ்வரூப் (இயக்குநர், மனிதவளத்துறை) எம்.வெங்கடாச்சலம் (இயக்குநர், மின்துறை) மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு,கோவிந்தராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இதன் தொடர்ச்சியாக, நெய்வேலியில் உள்ள அனைத்து அலகுகள் மற்றும் அலுவலகங்களில், தூய்மைப் பணிகள் நடைபெற்றன.இதில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து நிலை தொழிலாளர் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் டாக்டர் சுரேஷ் சந்திர சுமன் தூய்மைக்கு மகாத்மா காந்தியின் பங்களிப்பு மற்றும் சுதந்திரத்திற்கு இணையான அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மகாத்மாவின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘தூய்மையே சேவை’ என்ற இயக்கம் கடைப்பிடிக்கப்பட வலியுறுத்தினார்.

வேண்டியதன் அவசியத்தையும் அப்போது அவர் தூய்மை இந்தியா இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும், நமது அன்றாட வாழ்க்கையில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்,சமூக ஈடுபாட்டில் நாம் அனைவரும் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்தத் திட்டம் அமைந்திருந்தது.
முன்னதாக இந்த தூய்மைப்பணி இயக்கத்தில், நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள்,அலகுத் தலைவர்கள்,மனிதவளத் துறை நிர்வாகிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொறியாளர்கள்,பட்டய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க நிர்வாகிகள்,அனைத்து நலச் சங்கங்களின் பொறுப்பாளர்கள், தொழிலாளர்-ஊழியர்கள், இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பிற பங்குதாரர்கள், பள்ளி ஆசிரியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். மற்றும் மாணவர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img