fbpx
Homeபிற செய்திகள்வயநாட்டிற்கு மாதா அம்ருதானந்தமயி மடம் சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு

வயநாட்டிற்கு மாதா அம்ருதானந்தமயி மடம் சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு

அம்ருதபுரி, கேரளா-ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மாதா அம்ருதானந்தமயி மடம் கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், பேரிடர் நிவாரண முயற்சியை அறிவிக்க உள்ளது. இதற்காக ரூ.15 கோடி  உதவித் தொகையை மாதா அம்ருதானந்தமயி மடம் ஒதுக்கியுள்ளது. 

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்துடன் இணைந்து, மாதா அம்ருதானந்தமயி மடம், வயநாட்டில் பாதிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மேம்பட்ட நிலச்சரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வரும் அபாயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் செயல்பட உள்ளது. கேரள மாநில அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும்.

 மடத்தின் துணைத்தலைவர் ஸ்வாமி அம்ருதஸ்வரூபானந்தாபுரி  கூறுகையில், “ரூ.15 கோடி நிதியுதவியுடன், அம்ருதா நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை (A-LEWS) செயல்படுத்தி, அதன் தொடர்பான தேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார். 

அம்ருதா மையத்தின் பேராசிரியர்  மனீஷா வி ரமேஷ் கூறுகையில், 

“நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பிற்காக அம்மா மற்றும் மாதா அம்ருதானந்தமயி மடத்திற்கு நாங்கள் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img