fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 5 தியேட்டர்களுடன் ‘அல்வியல் ஃபன் சவ்வி மால்’ திறப்பு

கோவையில் 5 தியேட்டர்களுடன் ‘அல்வியல் ஃபன் சவ்வி மால்’ திறப்பு

கோவை பி.என்.புதூர் சீரநாயக்கன்பாளையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 5சினிமா தியேட்டர்க ளுடன் “அல்வியல் ஃபன் மால்” புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது
இது குறித்து அல்வியல் ஃபன்மால் தலைமை செயல் அதிகாரி வைரவன், தலைமை இயக்குனர் மேனகா ஆகியோர் கூறியதாவது:-

இந்த புதிய மால் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடங்கப் பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினர், நண்பர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் விளையாட்டு, உணவு, சினிமா, உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற மறக்க முடியாத அனுபவங்களை தருவாக இந்த மால் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மாலில் சர்வதேச தரத்துடன் தொடங்கப்பட்டு உள்ள ஐந்து பிவிஆர் – ஐனாக்ஸ் அரங்குகளில் வசதியான நகரும் இருக்கை வசதிகள், கால் களை வசதியாக வைத்துக் கொண்டு, படம் பார்க்கும் அனுபவம் புதுமையாக இருக்கும்.
மேற்கண்டவாறு அவர் கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img