fbpx
Homeபிற செய்திகள்மூத்த குடிமக்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா: கோவை காவல் ஆணையர் பங்கேற்பு

மூத்த குடிமக்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா: கோவை காவல் ஆணையர் பங்கேற்பு

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவை மாநகர காவல் துறை சார்பில், மூத்த குடிமக்களுக்கு 100 இலவச தலைக்கவசம் வழங்கும் விழா, கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், சிறுவர் போக்குவரத்து பூங்காவில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையரது அறிவுரைகளின் படி, ஊர் காவல்படையும், போக்குவ ரத்து கிழக்கு காவல் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்நி கழ்ச்சிக்கு தலைமை வகித்து, மூத்த குடிமக்களுக்கு இலவச தலைக்கவ சங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் தெற்கு துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார், போக்குவரத்து திட்டம் காவல் கூடுதல் துணை ஆணையர் ரவிச்சந்திரன் , மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் (கிழக்கு) A.சேகர், கோவை மாநகர ஊர்காவல்படை பிரதேச தளபதி C.S.விக்னேஷ்வர், வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்பதை காவல் துறையினர் அழுத்தமாக வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள், காவல்துறையினரின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினர். இந்நிகழ்வு, மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், காவல்துறையின் அக்கறையை எடுத்துக்காட்டுகிறது.

படிக்க வேண்டும்

spot_img