fbpx
Homeபிற செய்திகள்கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் நிரல் திருவிழாவில் சாதனை

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் நிரல் திருவிழாவில் சாதனை

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற முதலமைச்சரின் நான் முதல்வன் நிரல் திருவிழாவில், தானியங்கி சைக்கிளுக்கான முதல் பரிசும், அத்துடன் ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகையையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கல்லூரியில் செயல்படும் பொருள் உற்பத்தி மையத்தின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் அறிவுமணி ராவணன் தலைமையில், மாணவர்கள் மாதேஸ்வரன், லோகேஸ்வரன், அபினேஷ் , பிரேம் குமார், கிளாட்சன் பால் உள்ளிட்டோர் இந்த சைக்கிளை வடிவமைத்துள்ளனர். இவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பரிசும், வாழ்த்தும் பெற்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 290 பொறியியல் கல்லூரிகள் மூலமாக 8486 புதிய கண்டுபிடிப்புகளுக்கான செயல் திட்டம் பெறப்பட்டது. அதில் மேற்கு மண்டலம் அளவிலான கல்லூரிகளில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி முதல் பரிசினை பெற்றது.

சாதனை படைத்த அனைவருக்கும் கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா பழனிச்சாமி, துணை தலைவர் இந்துமதி முருகேசன், கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி முதல்வர் ரமேஷ், உட்பட அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img