fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு தினம்

நிர்மலா மகளிர் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு தினம்

நிர்மலா மகளிர் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு தினத்தினை முன்னிட்டு மாணவிகளுக்கு கவிதை, ஓவியம், நடனப் போட்டிகள் நடைபெற்றன. சிறப்பாக பங்கேற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாட்டை உருவாக்குவதில் இளையோரின் பங்கு எனும் தலைப்பில் கோவை தொழில் நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் ஜஸ்டின் ரூபன் சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், கல்லூரியின் முதல்வர் அருள்சகோதரி மேரி பபியோலா ஆகியோரும் தலைமை வகித்தனர்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப் பாளர்கள் முனைவர் திவ்யா, முனைவர் சகோதரி கிரேசி, முனைவர் மோகனா ஆகியோர் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் மாணவியர் 230 பேர் கலந்து பயன் அடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img