fbpx
Homeபிற செய்திகள்நெய்வேலி என்எல்சியில் பொது மருத்துவமனையின் சார்பில், சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

நெய்வேலி என்எல்சியில் பொது மருத்துவமனையின் சார்பில், சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட “தூய்மையே சேவை”என்ற பிரச்சார இயக்கத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், என்எல்சி பொது மருத்துவமனையின் சார்பில், சுகாதாரப் பணியாளர் களுக்கான (சஃபாய் மித் ராக்கள்) மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாம், என்எல்சிஐஎல் நிறுவனத்தின் சட்டம், நிறுவன சமூக பொறுப் புணர்வு துறை மற்றும் மருத்துவத்துறை ஆகிய வற்றின் செயல் இயக்குநர் டிவிஎஸ். என். மூர்த்தி, நிறுவன மனிதவளத்துறை தலைமை பொது மேலாளர் ஆர்.முருகன் மற்றும் தூய்மையே சேவை இயக்கத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில், சுகாதாரப் பணியாளர்களுக்கான இலவச ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர். மேலும், ஹீமோகுளோபின் அளவு,இரத்த அழுத்த அளவு, இரத்த குளுக்கோஸ் அளவு மற்றும் உடல் எடை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படுவோருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, தடுப்பு சுகாதாரம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. சுமார் 100 துப்புரவுத் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

பொது இடங்களில், பொது சுகாதாரம் மற் றும் தூய்மையைப் பராமரிப்பதில் சுகாதாரப் பணியாளர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். சுற்றுப்புற இடங்களை சுத்தம் செய்வதிலும், குப்பைகளை அகற்றுவதிலும், குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை திரட்டுவதிலும் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.

சமூகத்தில் சுகாதாரப் பணியாளர்களின் தாக்கத்தை உணர்ந்து, அபாயகரமான பணிச் சூழல்கள் காரணமாக அவர்களின் ஆரோக்கியத் திற்கு ஏற்படும் பல்வேறு வகையான சவால்களை மனதில் கொண்டு, சுகாதாரப் பணியாளர் களின் நலனுக்காக ஒரு மருத்துவ முகாம் நடத்த வேண்டியது அவசியமானது என்று என்எல்சிஐஎல் கருதியதன் அடிப்படையில் இம்முகாம் நடத்தப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்களின் (சஃபாய் கரம்சாரிகள்) தன்னலமற்ற சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img