fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொங்கு கிளை சார்பில் காந்தி ஜெயந்தி விழா

யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொங்கு கிளை சார்பில் காந்தி ஜெயந்தி விழா

யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொங்கு கிளை சார்பில் காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மற்றும் உலக மூத்தோர் தினத்தை ஒட்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மாதுளை, ஆப்பிள் & ஆரஞ்சு உள்ளிட்ட கனிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சசிரேகா துவக்கி வைத்தார். கொங்கு கிளை சேர்மன் மகேந்திரன், பொருளாளர் ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ராஜசூர்யா, செயலாளர் ராஜா, சுற்று சூழல் குழு உறுப்பினர் டாக்டர் ஐயப்பன், செயற்குழு உறுப்பினர்கள் அசோக் குமார், பாபு & பூமதி ஸ்டாலின், கிளை தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல் மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img