fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி 12-வது பட்டமளிப்பு விழா

தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி 12-வது பட்டமளிப்பு விழா

தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா பாரதிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங் கடேஸ்வரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மூத்த சிவில் நீதிபதி ராஜாராம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கலையரசன், புள்ளியியல் துறை டாக்டர் சிவக்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மேற்பார் வையாளர் உலகநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி, மாவட்ட சுகாதார அலுவலர் மதியழகன், மேற்பார்வையாளர் தொழுநோய்த் துறை நாகராஜ், மாவட்ட செவிலியர் சங்கத் தலைவி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 2021- 2023 மற்றும் 2022 – 2024 இரண்டு ஆண்டுகளில் டிப்ளமோ இன் பிராக்டிகல் நர்சிங், டிப்ளமோ இன் மெடிக்கல் லேபோரெட்ரி டெக்னாலஜி, டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டிப் ளமோ இன் அனஸ்தீசியா டெக்னீசியன், டிப்ளமோ இன் எக்ஸ்ரே டெக்னீசியன், டிப்ளமோ இன்டயாலிசிஸ் டெக்னீசியன் இது போன்ற பத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவு களில் படிப்பை நிறைவு செய்த சுமார் 184 மாணவ மாணவிகளுக்கு பட்டைய சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் 2021 – 2023 ஆம் ஆண்டில் டிப்ளமோ இன் பிராக்டிகல் நர்சிங் பயலும் மாணவி ஜெ.சந்தியாவுக்கு பல்க லைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்காக பல்க லைக்கழக தங்கப்பதக்கம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

மேலும் 2022 – 2024 ஆம் ஆண்டில் டிப்ளமோ இன் பிராக்டிகல் நர்சிங் பயிலும் மாணவி அனிதா அதே வகுப்பைச் சார்ந்த டிப்ளமோ இன் பிராக்டிகல் நர்சிங் பயலும் மாணவி சுபாஷினி ஆகியோருக்கு பல்கலைக்கழக தேர்வு முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்காக கேடயம், மெடல்கள், பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் மோகன் லட்சுமி, கல்லூரி இயக்குனர் மருத்துவர் அசோக் குமார், கல்லூரி பேராசிரியர்கள் பொன்னம்பலம், மகேஸ்வரி,ரஞ்சிதா குமுதா, செல்வி, யோகா ஆசிரியர் ஜெயபிரியா, மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிபிரசாந்த், சத்துணவு அமைப்பாளர் ராஜேஸ்வரி, நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, நிகழ்ச்சி தொகுப்பாளர் சௌந்தர பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img