fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் ரோஸ் தின விழா

கேஎம்சிஹெச் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் ரோஸ் தின விழா

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் தொடர்ந்து 12வது ஆண்டாக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. ரோஸ் தின விழாவுடன் இணை நிகழ்வுகளாக ராம்நகர் கேஎம்சிஹெச் சிட்டி சென்டரின் 32-வது ஆண்டுவிழாவும் மூத்த குடிமக்கள் நல கிளப்பின் 31-வது ஆண்டு விழாவும் நடைபெற்றன.

இது ‘ஊக்கமது கைவிடேல்’ என்ற கருத்தாக்கத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண் டவர்கள், அவர்கள் குடும்பத்தினர், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கேஎம்சி ஹெச் கதிரியக்க சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ஆர். சுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார். கேஎம்சி ஹெச் உதவிதலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி முதன்மை விருந்தினரை கௌரவித்தார்.

பிரபல தன்னம் பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஊக்கம் தரும் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, கேஎம்சி ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமையுரையும், செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி சிறப்புரையும் நிகழ்த்தினர்.

சிட்டி சென்டர் காது-மூக்கு -தொண்டை மருத்துவ ஆலோசகர் டாக்டர் வீணா கண்ணன் நன்றி யுரை நிகழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img