fbpx
Homeபிற செய்திகள்ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் செய்தி யாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளம் ஏற்படுத்தவும், திருப்பூர் மக்களின் நன்மை கருதியும், திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு சவாரி, நீர் விளையாட்டுகள், மற்றும் பார்வையாளர் மாடம் அமைத்து மேம்படுத்துதல், படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாக னங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று ள்ளன. தற்போது 99 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் ஏரி அமையும். மேலும், ஆண்டிப்பாளையம் ஏரி பகுதியில் மேலும் என்னென்ன சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் மற்றும் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img